சிலியில் மின்சார தட்டுப்பாடு…!!! மக்கள் கடும் அவதி…!!!

சிலியில் மின்சார தட்டுப்பாடு...!!! மக்கள் கடும் அவதி...!!!

நாடு முழுவதும் நிலவும் மின்தடை காரணமாக சிலி அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தலைநகர் சாண்டியேகோ உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

15 ஆண்டுகளில் இல்லாத மோசமான மின்தடையால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் போக்குவரத்து விளக்குகளும் இயங்காததால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அனைத்து ரயில் நிலையங்களில் இருந்தும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற ரயில்வே தனது ஊழியர்களை ஈடுபடுத்தியுள்ளது.

அந்நாட்டிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலைகள் அவசரகால ஜெனரேட்டர்களால் இயக்கப்படுகின்றன.

சிலியின் உள்துறை அமைச்சர்
தாக்குதலுக்கு உள்ளான காரணத்தால் மின்தடை ஏற்பட்டதற்கான வாய்ப்பில்லை என்றார்.