Singapore Job Vacancy News

சிங்கப்பூரின் சாலைகளில் மின் கனரக வாகனம்!

அடுத்த மாதம் சிங்கப்பூரின் சாலைகளில் முதல் மின்சார கனரக வாகன வலம் வர உள்ளது.

அந்த வாகனம் மின்கலன்களால் செயல்படும்.அடுத்த மாதத்திலிருந்து சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும்.

அந்த கனரக வாகனத்தின் நீளம் 25 அடி.அது Lithium மின்கலன்களைக் கொண்டு இயங்குகிறது.

அதனை ஒரு முறை முழுமையாக மின்னூட்டம் செய்தால் 180 கிலோமீட்டர் வரை இயங்கும்.

இது சிங்கப்பூரின் கிழக்கிலிருந்து மேற்கு வரை 3 முறை பயணம் செய்வதற்கு சமம்.

DB Schenker நிறுவனம் அந்த வாகனத்தை வைத்திருக்கிறது.

மின் வாகனங்களைக் கொண்டு செயல்பட விரும்புவதாக நிறுவனம் கூறியது.

அந்த இலக்கை அடையும் ஓர் அங்கமாக இந்த லாரி அமைந்துள்ளது.

ஆண்டு இறுதிக்குள் மேலும் 2 மின் லாரிகளை வாங்க திட்டமிட்டுள்ளது.