செயற்கை பல் பொருத்தும் தொழில்நுட்பத்தால் முதியவர்கள் பயனடையலாம்…!!!

செயற்கை பல் பொருத்தும் தொழில்நுட்பத்தால் முதியவர்கள் பயனடையலாம்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரைச் சேர்ந்த தேசிய பல்
மருத்துவமனை மற்றும் A*STAR அமைப்பும் இணைந்து செயற்கை பல் பொருத்தும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் மூலம் செயற்கைப் பற்கள் தேவைப்படும் முதியவர்கள் இப்போது அவற்றை விரைவாகவும் மலிவு விலையிலும் பொருத்திக் கொள்ள முடியும்.

வயதான மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2035 ஆம் ஆண்டளவில் செயற்கைப் பல் சேவைகளை மூன்று மடங்காக உயர்த்த வேண்டிய அவசியத்தை மையம் மதிப்பிடுகிறது.

இந்தப் புதிய செயற்கைப் பல் பொருத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளிகளின் பற்களை புகைப்படம் எடுக்க முடியும்.

அதைப் பயன்படுத்தி முப்பரிமாண மாதிரியை உடனடியாக உருவாக்க முடியும்.

செயற்கைப் பற்களின் வடிவமைப்பில் தேவையான மாற்றங்களைச் செய்த பிறகு, மருத்துவர்கள் இறுதி வடிவத்தை தயார் செய்யலாம்.

இந்த நடைமுறையில்,ஐந்து முறைக்கு பதிலாக மூன்று முறை மட்டுமே மருந்தகத்திற்கு சென்றால் போதுமானதாக இருக்கும்.

மேலும் இந்த தொழில் நுட்பத்தில் அதிக ஊழியர்கள் தேவைப்பட மாட்டார்கள், இது நோயாளிகளுக்கு செலவுகளைக் குறைக்கும் என்று நிலையம் கூறுகிறது.

இந்த எலக்ட்ரானிக் செயற்கைப் பற்கள் தயாரிக்கும் முறை பற்களை இன்னும் துல்லியமாக பொருத்த உதவுகிறது.

இந்த தொழில்நுட்ப சோதனையில் 90 நோயாளிகளும் 38 மருத்துவர்களும் கலந்துகொண்டனர்.

அதில் கலந்து கொண்ட 95 சதவீதம் பேர் இந்த தொழில்நுட்பம் சிறந்தது என தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து வணிக மற்றும் தனியார் மருந்தகங்களில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

Follow us on : click here ⬇️