மியான்மரின் “தனாக்கா” அழகு பராமரிப்பை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்க முயற்சி..!!!!

மியான்மரின் “தனாக்கா” அழகு பராமரிப்பை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்க முயற்சி..!!!!

மியான்மர் தனது பாரம்பரிய அழகு முறையான தனாக்காவை யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்க முயல்கிறது.

உள்நாட்டில் வளர்க்கப்படும் சந்தன மரங்களின் பட்டையை அரைத்து முகத்தில் பூசுவார்கள்.

இதனைப் பூசுவதால் உடல் குளிர்ச்சியடைவதோடு, சருமம் பொலிவுறும் என்பது மியான்மர் மக்களின் நம்பிக்கை.

தனாக்காவின் மகத்துவத்தை உலகுக்குக் காட்ட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்.

அதற்காக ஒரு போட்டி ஒன்று நடத்தப்பட்டது.

அதில் 5 வயது முதல் 80 வயது வரையிலான போட்டியாளர்கள் தனாக்காவுடன் அழகுபடுத்திக் கொண்டு போட்டியில் கலந்து கொண்டனர்.

பொதுவாக பெண்களும் குழந்தைகளும் காலைக் குளித்த பின்பும், இரவு உறங்கச் செல்வதற்கு முன்பும் தனாக்காவை பூசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

சில ஆண்களும் அதைப் பயன்படுத்துவதைக் காணலாம்.

2020 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ பட்டியலில் தனாக்காவை சேர்க்க மியான்மர் முயற்சித்தது.

ஆனால் அது தோல்வியில் முடிந்தது. தற்போது இந்த ஆண்டு மியான்மர் மீண்டும் அந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan