ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஜாஸ்பர் சூறாவளியால் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக கனமழை பெய்தது.
இந்த கனமழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்த வெள்ளத்தில் 85 வயது முதியவர் ஒருவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
அவரைத் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகரம் முழுவதும் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் அபாய நிலையை எட்டியது. இதனால் தொலைதூரப் பகுதிகளில் சிக்கித் தவிக்கின்ற மக்களை மீட்கும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வெள்ளத்தால் நகரின் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வீடுகள், சாலைகள் மற்றும் பண்ணைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளில் முழு கவனம் செலுத்தி வருவதாக அவர்கள் கூறினர்.