ஊழியர்களுக்கு வயிற்றுக் கோளாறு சம்பவத்தின் எதிரொலி!! 2 உணவு நிறுவனங்களுக்கு தற்காலிக தடை!!

ஊழியர்களுக்கு வயிற்றுக் கோளாறு சம்பவத்தின் எதிரொலி!! 2 உணவு நிறுவனங்களுக்கு தற்காலிக தடை!!

ஊழியர்களுக்கு ஏற்பட்ட வயிற்றுக் கோளாறு…! 2 உணவு நிறுவனங்களுக்கு தற்காலிக தடை …!

சிங்கப்பூர்: டிக்டோக்கை வைத்திருக்கும் One Raffles Quay இல் உள்ள பைட் டான்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

யுன் ஹாய் யௌ உணவு நிறுவனம் யுன் நன்ஸ் உணவகங்களை நடத்துகிறது.

நார்த்பாயிண்ட் சிட்டி மாலில் உள்ள யுன் நன்ஸ் உணவகம்,செனோகோவில் உள்ள பு டியென் சர்வீசஸ் உணவு நிறுவனம் ஆகிய இரு உணவு நிறுவனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவை சுகாதார அமைச்சகமும், சிங்கப்பூர் உணவு அமைப்பும் அறிவித்துள்ளது.

130 பேருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) மற்றும் சுகாதார அமைச்சகம் (MOH) One Raffles Quay இல் உள்ள பைட் டான்ஸ் அலுவலகத்தில் பதிவாகிய வழக்குகளை விசாரித்து வருவதாக கூறியது.

ஜூலை 30 நிலவரப்படி, இரைப்பை குடல் அழற்சி அறிகுறிகளை உருவாக்கிய 60 பேரில் 57 பேர் மருத்துவமனைகளில் மருத்துவ உதவியை நாடியுள்ளனர் என்று அதிகாரிகள் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF), One Raffles Quay இல் மருத்துவ உதவிக்காக பல அழைப்புகள் வந்ததாகக் கூறியது. மொத்தம் 17 ஆம்புலன்ஸ்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தது.

ஊழியர்கள் சிலருக்கு வயிற்று வலி மற்றும் வாந்தியின் அறிகுறிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.57 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனை மற்றும் ராஃபிள்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் SCDF கூறியது.அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று கூறினார்.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்குப் பதிலளித்த பைட் டான்ஸ் அதிகாரி ஒருவர், “எங்கள் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளோம்.அவசரகால சேவைகளுடன் பணியாற்றுவது உட்பட அனைத்தும் செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது நச்சுணவு சம்பவம் இதுவாகும்.