தமிழகத்தில் ஃபஞ்சல் புயலின் எதிரொலி!! சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்!!

தமிழகத்தில் ஃபஞ்சல் புயலின் எதிரொலி!! சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்!!

தமிழகத்தை ஃபங்சல் புயல் நெருங்கி கொண்டே வருகிறது.இதனை அடுத்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

மோசமான வானிலை நிலவுவதால் தமிழகத்தின் சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

அங்கு இரு வழி பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.சுமார் 7 மணி நேரங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக இந்து நாளேடு தெரிவித்துள்ளது.

விமான நிலையம் இந்தியா நேரப்படி நவம்பர் 30-ஆம் தேதி(இன்று) மதியம் 12.30 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படாது.

வானிலை ஆய்வு மையம் மற்றும் விமான நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஆலோசனை செய்யப்பட்ட பிறகே சென்னை விமான நிலையத்தை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஃபஞ்சல் புயல் காரணமாக சென்னையில் ஆங்காங்கே சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மெரினா கடற்கரை கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

Follow us on : click here ⬇️