ஐஸ்கிரீமை சாப்பிட்டது ஒரு குத்தமா…!!! தாயை மிரள விட்ட மகன்…!!!

ஐஸ்கிரீமை சாப்பிட்டது ஒரு குத்தமா...!!! தாயை மிரள விட்ட மகன்...!!!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் காவல்துறையை தொடர்பு கொண்டு தனது தாயை கைது செய்யும்படி கூறியுள்ளார்.

“என் அம்மா மோசமாக நடந்து கொள்கிறார். வந்து என் அம்மாவை கைது செய்யுங்கள்” என்று புகார் அளித்துள்ளான்.

சிறுவனின் ஐஸ்கிரீமை தாய் எடுத்துச் சாப்பிட்டதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

சிறுவன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, ​தாய் அவனிடமிருந்து தொலைபேசியை வாங்கி போலீஸ் அதிகாரியிடம் பேசினார்.

தனது மகனின் ஐஸ்கிரீமை தான் சாப்பிட்டதால்
மனமுடைந்த அவன் போலீஸை அழைத்ததாக தெரிவித்தார்.

ஆனால் அதிகாரிகள் சிறுவனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வீட்டிற்குச் சென்றனர். சிறுவன் தனது தாயைப் பற்றி அதிகாரிகளிடம் நேரடியாகப் புகார் செய்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, சிறுவன் தனது தாயைக் கைது செய்ய வேண்டாம் என்றும், தனக்கு ஐஸ்கிரீம் தான் வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதிகாரிகள் அந்தச் சிறுவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.