திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தொடரும் மீட்பு பணிகள்!!

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தொடரும் மீட்பு பணிகள்!!

திபெத்தில் உள்ள Shigatse நகரில் நிலநடுக்கம் உலுக்கியது.சீனாவில் உள்ள மலைப்பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று (ஜனவரி 7) காலை 9 மணியளவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் 95பேர் உயிரிழந்துள்ளனர். 130 பேர் காயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கமானது 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தின் வலுவான அதிர்வுகள் இந்தியாவின் சில பகுதிகளிலும் நேபாள தலைநகர் காட்மாண்ட்விலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட மூன்று மணி நேரத்தில் சுமார் 50 நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது 200 ராணுவ வீரர்கள் உட்பட 1500 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக CCTV ஊடகங்கள் தெரிவித்தது.