தென் பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!!

தென் பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!!

தென் பிலிப்பீன்ஸில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.Mindanao தீவின் கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கம் 30 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் இல்லை என்று அது கூறியது.

நிலநடுக்கத்தால் மோசமான சேதங்கள் ஏதும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் AFP யிடம் கூறியுள்ளனர்.

“அது மிகவும் வலுவாக இருந்தது.ஆனால் நீண்ட நேரத்துக்கு நீடிக்கவில்லை.சேதங்களும் ஏற்படவில்லை” என்று தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

Ring of Fire என்ற பகுதியில் பிலிப்பீன்ஸ் அமைந்துள்ளது.இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது.

அந்த நிலநடுக்கங்கள் பெரும்பாலும் மனிதர்களால் உணர முடியாத அளவிற்கு பலவீனமானவை என்று கூறப்படுகிறது.

 

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan