மீண்டும் மீண்டும் நிலநடுக்கங்களுக்கு ஆளாகும் நாடு….. பீதியில் மக்கள்…..

அண்மையில் ஆப்கானிஸ்தானை வலுவான நிலநடுக்கங்கள் தாக்கியது.இது ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது.மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள முழு கிராமங்களையும் தரைமட்டமாக்கியது.

அக்டோபர் 7-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கங்கள் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான நிலநடுக்கங்களில் ஒன்று. அது ஹெராட்டில் உள்ள முழு கிராமங்களையும் தரைமட்டமாக்கியது மட்டுமல்லாமல் பலர் தங்கள் குடும்பங்களை இழந்துள்ளனர்.

தற்போது மீண்டும் அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ஞாயிற்றுகிழமை மேற்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ஹெராட்டுக்கு வெளியே சுமார் 34 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

ஞாயிற்றுகிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 4 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 153 பேர் காயமடைந்துள்ளனர்.பல கிராமங்களும் இந்த நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உதவிக்குழு தெரிவித்துள்ளது.