தெற்கு பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கம்!!
தெற்கு பிலிப்பைன்சில் ஜனவரி 9ஆம் தேதி அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது.
ஆனால் இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலநடுக்கம் மிண்டனாவ் தீவுக்கு அருகே 70 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பிலிப்பைன்ஸ், பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்திருப்பதால் இங்கு தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
பெரும்பாலான நிலநடுக்கங்கள் மனிதர்களால் உணர முடியாத அளவுக்கு மிகவும் பலவீனமானதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.