நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ரிக்டர் அளவு 5.6. நிலநடுக்கத்தால் சில வீடுகள் சேதுமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியா தலைநகரமான புதுடெல்லி வரை உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் நேபாள தலைநகரமான காட்மாண்டில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதுவரை உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஒன்பதாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.அதன் ரிக்டர் அளவு 7.8.