மியான்மர்,தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! தேடல் மீட்பு பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்!!

மியான்மர்,தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! தேடல் மீட்பு பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்!!

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர் சேதங்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மியான்மர் மற்றும் தாய்லாந்துக்கு தேவையான உதவிகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இரு நாடுகளிலும் தேடல் மீட்பு பணிகளுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் operation lionheart குழுவை அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக அமைச்சகம் கூறியது.

மியான்மரில் நிவாரண உதவிகளை வழங்க அந்த குழு உதவும் என்று கூறியது.

நிலவரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அமைச்சகம் சொன்னது.

மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ள சிங்கப்பூரர்களையும் அமைச்சகம் தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவித்தது.

அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் கூறியது.

மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் இதுவரை சிங்கப்பூரர்கள் எவரும் காயமுற்றதாக தகவல் இல்லை என்பதையும் அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

தொடர் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் விழிப்புடன் இருக்கும்படி அமைச்சகம் அங்கிருக்கும் சிங்கப்பூரர்களை கேட்டு கொண்டுள்ளது.

முன்னெச்சரிக்கையாக இருப்பதோடு உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் அது அறிவுறுத்தியது.

மேலும் மியான்மருக்கு அவசரமற்ற மற்றும் தேவையில்லாத பயணங்களை ஒத்தி வைக்கும்படி சிங்கப்பூரர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.