சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..!!!குலதெய்வ கோவிலில் 3வது மகனுக்கு காது குத்து விழா..!!!

சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..!!!குலதெய்வ கோவிலில் 3வது மகனுக்கு காது குத்து விழா..!!!

திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலில் உள்ள குலதெய்வ கோவிலில் சிவகார்த்திகேயன் தனது 3வது மகன் பவனுக்கு காதுகுத்து விழாவை நடத்தி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.சிவகார்த்திகேயன் சினிமாவில் ஆரம்ப காலத்தில் ஒரு சில சிறிய பட்ஜெட் படங்களில் நடித்தார்.மேலும் தனுஷுடன் 3 படங்களில் இணைந்து நடித்தார்.அதன் பிறகு சூரி மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சில நகைச்சுவை படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் வெளியான “ஊதா கலரு ரிப்பன்” பாடல் இணையத்தில் அதிக லைக்ஸ்களை பெற்றது.

மேலும் அவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், பின்னணி பாடகர் மற்றும் தயாரிப்பாளராகவும் தன்னை வளர்த்துக் கொண்டார்.சிவகார்த்திகேயன் கேரியரில் எந்த படமும் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்யாத நிலையில், தற்போது வெளியான அமரன் படம் அவரது கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. அது அவரை சினிமாவின்
உச்சத்துக்கே அழைத்துச் சென்றது.இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

சினிமாவை தவிர்த்து குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் சிவகார்த்திகேயன், தனது மாமாவின் மகளான ஆர்த்தியை 2010 ஆகஸ்ட் 27 அன்று திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா என்ற பெண் குழந்தை பிறந்தது. வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை சிவகார்த்திகேயன் தனது மகளுடன் இணைந்து பாடியது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு இரண்டாவதாக குகன் தாஸ் என்ற மகன் பிறந்த பிறகு,பவன் என்ற மூன்றாவது ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன் தற்போது தனது 3வது மகனுக்கு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான திருவீழிமிழலில் உள்ள குலதெய்வ கோவிலில் காதணி விழா நடத்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தனது 3வது மகன் பவனுக்கு மகா மாரியம்மன் கோவிலில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் காதணி விழா நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 25வது படமான பராசக்தி படத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் முருகன் கோயிலுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan