அக்டோபர் 28ஆம் தேதி அன்று மதியம் மூன்று மணியளவில், மலேசியாவின் பெட்டாலிங் ஜெயா நகரில் உள்ள Megah Rise மாலின் கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.
கூரை இடிந்து விழுந்த சத்தம் கேட்டு மாலில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிச் சென்றனர்.
இச்சம்பவத்தின் போது அப்பகுதியில் பலத்த காற்று வீசியதாகவும், கனமழை பெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்த விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாக மால் நிர்வாகம் தெரிவித்தது.
மேலும் மாலின் பாதிக்கப்பட்ட பகுதிகள் அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்றும், பிற வணிக வளாகங்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும் நிர்வாகம் கூறியது.
மால் நிர்வாகம், இந்த விபத்து குறித்து மிகவும் வருத்தப்படுவதாக தெரிவித்தது.
மேலும் இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதி அளித்தது.