குடிபோதையில் காரை ஓட்டி விபத்து!! இடத்தை விட்டு தப்பியோடிய நபர் கைது!!

சிங்கப்பூரில் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி அதிகாலை 6.15 மணியளவில் புங்கோலில் கார் ஒன்று விபத்துக்குள்ளானது.

கார் ஓட்டியவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகவும்,அந்த காரில் போதைப்பொருள் மற்றும் இ- வேப்பரைசர் இருந்ததாகவும் காவல்துறை கண்டுப்பிடித்தது.

கார் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன் அந்த டிரைவர் அங்கிருந்து சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

38 வயதான நபர் பின்னர் ஓட்டுநராக அடையாளம் காணப்பட்டதோடு குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாகவும் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டார்.

கார் மிகவும் மோசமாக சேதமடைந்து இருப்பதையும், வாகனத்தின் முன்பகுதியின் டயர் கழன்று இருப்பதையும் Lianhe Zaobao வெளியிட்ட புகைப்படத்தில் காணலாம்.