சிங்கப்பூரில் நூதன முறையில் போதைப்பொருள் கடத்தல்!! சிக்கிய வெளிநாட்டவர்!!
சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அப்போது 4 கிலோகிராமுக்கு அதிகமான ice போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு $500,000.
அவைகள் இரண்டு அலங்கார சிங்க உருவம் கொண்ட பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டு கடத்தல் முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வெளிநாட்டைச் சேர்ந்த 25 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளதாக CNA வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சாங்கி சௌத் பகுதியில் அருகே விமான சரக்கு கிடங்கில் ஒரு பொட்டலத்தை வைத்த பிறகு கைது செய்யப்பட்டார்.
அலங்காரப் பொருட்களில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்று அழைக்கப்படும் ஐஸ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் குறித்து ஹாங்காங் காவல்துறை தகவல் அளித்ததற்கு CNB நன்றி தெரிவித்தது.
ஹாங்காங் அளித்த தகவலின் அடிப்படையில் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் எந்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
சிலைகளின் அடிப்பாகத்தில் சுமார் 4.15 கிலோகிராம் ice போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
Follow us on : click here