சிங்கப்பூர் கப்பல் ஒன்றில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு!! பிடிப்பட்டுள்ள இந்தியர்கள்!!

சிங்கப்பூர் கப்பல் ஒன்றில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு!! பிடிப்பட்டுள்ள இந்தியர்கள்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் கப்பலொன்றில் போதைப்பொருள் கடத்த முயன்றவர்களை தடுத்ததாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் ரியாவ் தீவுகளில் நடந்தது.

சிங்கப்பூரின் லெஜண்ட் அகுரிஸ் கப்பலில் சுமார் 106 கிலோகிராம் படிக மெத்தாம்பேட்டமைன் கண்டுபிடிக்கப்பட்டது.

கப்பலில் சிங்கப்பூர் பணி அனுமதி பெற்ற மூன்று பேர் இருந்தனர். மூவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் போதைப்பொருள் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் கப்பல் ஊழியர்கள் இல்லை என்றும் கப்பலில் போதைப்பொருட்களை மறைத்து வைப்பதற்காக தனி இடத்தை உருவாக்கியுள்ளனர் என கூறப்படுகிறது.

போதைப்பொருட்கள் எரிபொருள் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த கப்பல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்குச் சென்று கொண்டிருப்பதாக மூவரும் கூறினர்.

மேலும் இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.