மலேசியாவிற்கு உரிமம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்கள் கைது…!!!

மலேசியாவிற்கு உரிமம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்கள் கைது...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உரிமம் இல்லாமல் மலேசியாவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற 24 ஓட்டுனர்களை நிலப் போக்குவரத்து ஆணையம் இந்த ஆண்டு கைது செய்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகமாகும்.

பள்ளி விடுமுறை துவங்கியுள்ளதால் பயணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

பயணிகள் தங்கள் பயண சேவையை கவனமாக தேர்வு செய்யுமாறு டாக்ஸி சேவை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எல்லையை கடக்கும் சட்டவிரோத டாக்ஸி சேவைகளுக்கான விளம்பரங்களை ஆன்லைனில் காணலாம்.

அவர்களில் சிலர் உரிமம் வைத்திருப்பதாகக் கூறுகின்றனர்.

சில உரிமம் பெற்ற டாக்சிகள் மட்டுமே இரு நாடுகளுக்கு இடையே இயக்க முடியும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத சேவைகளுக்கு பயணக் காப்பீடு இல்லை இதனால் பயணிகள் உரிமம் பெற்ற டாக்ஸி சேவைகளை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஓட்டுநர்கள் பிடிபட்டால் 3,000 வெள்ளி வரை அபராதம்,6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.