மத்திய விரைவுச் சாலையின் சுரங்கப்பாதையில் சேதம் ஏற்படுத்தியதாக ஓட்டுநர் கைது!!

மத்திய விரைவுச் சாலையின் சுரங்கப்பாதையில் சேதம் ஏற்படுத்தியதாக ஓட்டுநர் கைது!!

சிங்கப்பூர்: மத்திய அதிவேக நெடுஞ்சாலை(CTE) இன் சுரங்கப்பாதையில் 4.5 மீட்டர் உயர டிரக்கை ஓட்டி சேதம் விளைவித்ததற்காக 55 வயது ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுரங்கப்பாதையின் மேற்கூரையில் லாரி மோதியதில், அங்கிருந்த மின் கேபிள்கள் சேதமடைந்தன.

இதனால் சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டதாக 8 World செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று (நவம்பர் 8) மதியம் 12 மணியளவில் கெர்ன்ஹில் சர்க்கல் நுழைவாயிலுக்கு அருகில் நடந்தது.

இந்த சம்பவத்தின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

அந்தப் படத்தில் மேற்கூரை சேதமடைந்து மின் வயர்கள் அறுந்து தொங்குவதை காணலாம்.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை காவல்துறை 8world செய்தித்தளத்திடம் கூறியது.

4.5 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட லாரியை காவல் அதிகாரி அல்லது துணை காவல் அதிகாரியின் துணையின்றி சுரங்கப்பாதைக்குள் ஓட்டியதன் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Follow us on : click here ⬇️

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg