மிஸ் பண்ணிடாதீங்க… வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி!!

மிஸ் பண்ணிடாதீங்க... வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி!!

சிங்கப்பூர்: வெளிநாட்டு ஊழியர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் வெளிநாட்டு பணியாளர் மையம் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

திரைப்பட டிக்கெட்டுகளை தள்ளுபடியில் பாதி விலைக்கு அந்நிலையத்தில் உறுப்பினர்களாக இருக்கும் ஊழியர்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் மேற்கொண்டு படிக்கவும், பயிற்சி திட்டங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் வசதிகள் இருக்கும்.

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் நிலையத்துடன் இணைந்து ஜூன் 23 அன்று வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தொழிலாளர் தின விழாவை ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்ச்சியில் சுமார் 26,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் கலந்து கொண்டதாக 8 வேர்ல்ட் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

பயிற்சி நிறுவனமான Grow Education Ltd ஊழியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான கல்வித் திட்டங்களை வழங்குகிறது.

கார்னிவல் தியேட்டர்களுக்கு வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் சலுகைகளை பயன்படுத்தி 8 வெள்ளிக்கு திரைப்படங்களைப் பார்க்கலாம் எனக் கூறியது.

மேலும் இந்தச் சலுகையானது திங்கள் முதல் வியாழன் வரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Follow us on : click here 👇👇

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg