உங்களது சருமம் எந்த வகை என்று தெரியவில்லையா..?? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!!!

உங்களது சருமம் எந்த வகை என்று தெரியவில்லையா..?? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!!!

நம் அனைவரின் சருமமும் ஒரே மாதிரி இருக்காது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு வகையான சருமம் இருக்கும். சிலருக்கு எண்ணெய் பசை போன்ற சருமம் இருக்கும். சிலருக்கோ வறண்ட மற்றும் சாதாரண சருமம் இருக்கும்.

சிலர் தங்கள் சரும வகையை அறியாமலேயே கிரீம்கள் மற்றும் ஜெல்களைப் பயன்படுத்துகிறார்கள்.இது சரும ஆரோக்கியத்தை மோசமாக்கும். எனவே, உங்கள் சரும வகையை அறிந்து கொள்வது அவசியம்.

அதற்கு, இரவில் தூங்கச் செல்வதற்கு முன் உங்கள் சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் தடவ வேண்டும். காலையில் எழுந்தவுடன் உங்கள் முகத்தை பார்த்தால் உங்கள் முகம் எண்ணெய் பசையாக இருந்தால், உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருக்கிறது என்று அர்த்தம்.

அதுவே உங்கள் முகம் வறண்டு காணப்பட்டால், உங்களுக்கு வறண்ட சருமம் இருக்கிறது. நீங்கள் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை என்றால், சாதாரண சருமம் உங்களுக்கு இருக்கின்றது என்று அர்த்தம்.உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால், நீங்கள் ஜெல் வகை அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.

கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவுவது எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும். அதேபோல், வறண்ட சருமப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கிரீம் வகைப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.

முகத்தில் எண்ணெய் பசையை கட்டுப்படுத்துவது எப்படி..???

✨️ முல்தானி மெட்டியை பன்னீருடன் கலந்து முகத்தில் தடவினால் எண்ணெய் பசை குறையும்.

✨️ கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவினால் எண்ணெய் பசை குறையும்.

✨️ அடிக்கடி முகத்தைக் கழுவ வேண்டும்.

✨️ எண்ணெய் பசை நிறைந்த உணவுகளைக் குறைக்கவும்.

✨️ கடலை மாவு மற்றும் பச்சை பயறு மாவை சேர்த்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி குளிப்பதால் எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படும்.

சரும வறட்சியை குறைப்பது எப்படி..??

✨️ தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவுவதால் சரும வறட்சி குறையும்.

✨️ இயற்கை கிரீம்களைப் பயன்படுத்துவதால் சருமம் வறண்டு போவது தடுக்கப்படும்.

✨️ பால் போன்ற லோஷன்களை சருமத்தில் தடவுவதால் சருமம் வறண்டு போவது தடுக்கப்படும்.

✨️ வைட்டமின் ஈ மாத்திரைகளை சருமத்தில் தடவுவதால் சருமம் மென்மையாக இருக்கும்.

இப்படி தங்களுக்கு முகத்திற்கு ஏற்ற கிரீமையோ, ஜெல்லையோ பயன்படுத்துவதன் மூலம் நமது சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.