சிங்கப்பூரில் மறந்துகூட இந்த தவறை செய்யாதீர்கள்…..

சிங்கப்பூரில் Tampines இல் உள்ள புதிய BTO திட்டமான GreenDew எஸ்டேட்டில் சட்டவிரோதமாக ஒரு நபர் அங்கிருந்த மரம் ஒன்றை வெட்டியுள்ளார்.

ஒரு நபர் சட்டவிரோதமாக அங்கிருந்த மரத்தை வெட்டியதை பார்த்ததாக அங்கு வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் ஆகஸ்ட் 23- ஆம் தேதி தெரிவித்ததாக Town council செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இச்செயலை செய்த நபரை Tampines Town Council தேடுகிறது. இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

பொது இடங்களில் உள்ள செடிகள், மரங்கள் அல்லது புதர்களை சேதப்படுத்துவதோ அல்லது அகற்றுவதோ டவுன் கவுன்சிலின் விதிகளை மீறுவதாகும் என்று எச்சரித்தது.

குற்றவாளி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்றும் கூறியது.குற்றவாளி பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தால் முன்வந்து கூறுமாறு ஆகஸ்ட் 24-ஆம் தேதி GreenDew எஸ்டேட்டில் டவுன் கவுன்சில் நோட்டீஸ் வைத்துள்ளது.