சிங்கப்பூரில் 71 வயதான முதியவர் ஒருவர் முதலீட்டு மோசடியில் $1.5 மில்லியன் இழப்பதை காவல்துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
பாதிக்கப்பட்டவர் வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பெரிய தொகை செலுத்த முயன்றார். இதைக் கண்டறிந்த காவல்துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் மோசடி குறித்து அவரை எச்சரித்தனர்.
இதன் மூலம் அவர் பெரும் தொகையை இழப்பதை தடுக்க முடிந்ததாக காவல்துறையினர் கூறினர்.இதுபோன்ற முதலீட்டு மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தகவல்களின் உண்மைத்தன்மையை நிதி ஆணையத்தின் இணையதளத்தில் சரிபார்க்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
மேலும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை எச்சரிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.