அல்பேனியாவில் அதிகரிக்கும் கழுதை பண்ணைகள்..!!!
அல்பேனியாவில் கழுதை பண்ணைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
கழுதைப்பாலில் அழகு மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக நம்பப்படுகிறது.
ஒரு கழுதை ஒரு நாளைக்கு அரை லிட்டர் பால் மட்டுமே தருகின்றது.
எனவே கழுதையிலிருந்து பெறப்படும் பால் மிகவும் அரிதானதாகவும் விலை உயர்ந்தும் காணப்படுகிறது.
எனவே உலகின் மிக விலையுயர்ந்த பாலாடைக்கட்டி கழுதைப்பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
ஒரு கிலோ சீஸ் 1,500 யூரோக்களுக்கு (2,116 வெள்ளி) விற்கப்படுகிறது.
கோவிட்-19க்குப் பிறகு அல்பேனியாவில் கழுதைப்பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸ் மிகவும் பிரபலமாகிவிட்டது.
அங்கு சுமார் 15 கழுதை பண்ணைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு லிட்டர் கழுதைப் பால் 50 முதல் 60 யூரோக்கள் (70 முதல் 84 வெள்ளி) வரை விற்கப்படுகிறது.
ஒரு கிலோ சீஸ் தயாரிக்க குறைந்தபட்சம் 25 லிட்டர் கழுதைப்பால் தேவைப்படுகிறது.
இதன் விலை 1,000 யூரோக்கள் (1,410 வெள்ளி).
கழுதை பால் விலை அதிகம் என்றாலும், பல அல்பேனியர்கள் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட சீஸை வாங்க விரும்புவதாக கழுதைப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
Follow us on : click here