Latest Singapore News

சிங்கப்பூரில் இல்லப் பணி பெண்களுக்காக!

சிங்கப்பூரில் இல்ல பணிப்பெண் வேலை பார்ப்பவர்களுக்கும்,அவர்களின் முதலாளிகளும் உதவி அல்லது ஆலோசனை நாடப் புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

உட்லண்ஸில் இல்ல பணிப்பெண்களுக்கான மூன்றாவது நிலையம் அமைந்துள்ளது.

அதே போன்ற நிலையங்கள் Tampines,Pasir Panjang ஆகிய இடங்களில் உள்ளன.

இல்ல பணிப்பெண் வேலையில் புதிதாக வேலைக்கு சேரும் இல்ல பணிப் பெண்கள் நல்வாழ்வு ஆலோசனை பெறலாம்.

மொத்தம் 26 அறைகள் நிலையத்தில் இருக்கிறது.

வேலைக்கு சேரும் இல்லப் பணிப்பெண்கள் முதல் ஆண்டில் இரண்டு அமர்வுகளில் ஆலோசனை பெற வேண்டும்.

சிங்கப்பூர் வாழ்க்கை முறைக்கு ஏற்ப பணிப்பெண்கள் செயல்பட நிலையங்கள் உதவும்.

நிலையங்கள் பணிப்பெண்களின் நலவாழ்வு ஆதரவை வலுப்படுத்தும் வகையில் செயல்படும்.

அவர்கள் புதிய திறன்களை கற்றுக் கொள்வதற்காக வார இறுதியில் வகுப்புகளும் நடத்தப்படும்.

மாதந்தோறும் கிட்டத்தட்ட 9,000 க்கும் அதிகமான பணி பெண்கள் மூன்று நிலையங்கள் மூலம் பயன்பெறுவர்.