கைகளை சிவக்க வைக்கும் மருதாணியில் இத்தனை மருத்துவ குணங்களா…??

கைகளை சிவக்க வைக்கும் மருதாணியில் இத்தனை மருத்துவ குணங்களா...??

பண்டைய காலங்களிலிருந்து விரல்கள் மற்றும் கால் விரல்களை சிவப்பாக மாற்ற மருதாணி போன்ற இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மருதாணி இலைகளைப் பறித்து, புளி அல்லது எலுமிச்சையுடன் கலந்து, அரைத்து, கை, கால்களில் தடவினால் அவை பளிச்சென்ற சிவப்பு நிறமாக மாறும்.

சிலர் மருதாணியை சிவப்பாக மாற்ற சர்க்கரை நீரைச் சேர்ப்பார்கள். பலர் மருதாணியை அழகு சாந்த பொருளாகவே நினைக்கிறார்கள். கிராமப்புறங்களில் அதிகமாக வளரும் மருதாணி செடி ஒரு அரிய வகை மூலிகை ஆகும்.

மருதாணியின் இலை மட்டுமல்ல, அதன் பூவும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மருதாணி இலைகளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி

✨️ தீக்காயங்கள் மற்றும் வடுக்கள் மறைய மருதாணி இலைகளைப் பயன்படுத்தலாம்.

✨️ மருதாணி இலைகளை அரைத்து காயங்களில் தடவினால் அவை விரைவில் குணமாகும்.

✨️ மருதாணி இலைகளை பொடியாக அரைத்து நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.

✨️ இளநரையை சரி செய்ய மருதாணி முக்கிய பங்கு வகிக்கிறது.


✨️ மருதாணி இலைகளை அரைத்து அவுரிப் பொடியுடன் கலந்து தலையில் தடவினால், வெள்ளை முடி கருப்பாக மாறும்.

✨️ மூட்டுப் பகுதியில் மருதாணி எண்ணெயைப் பூசுவது வலியைக் குறைக்கும்.

✨️ மருதாணி இலைகளை தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்து தலையில் தடவினால், முடி உதிர்வு நிற்கும்.

✨️ உடல் சூட்டைக் குறைக்க மருதாணி இலைகளை அரைத்து விரல்கள் மற்றும் கால் விரல்களில் தடவவும்.

✨️ உடல் சூட்டைக் குறைக்க, கைகளில் மருதாணி பேஸ்ட்டைப் பூசவும்.

✨️ உடல் சூட்டால் வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படுத்தும். இதற்கு மருதாணி இலைச் சாற்றை வயிற்றுப் பகுதியில் தடவவும்.

✨️ தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க தேங்காய் எண்ணெயுடன் மருதாணி சாறு கலந்து பயன்படுத்தலாம்.

✨️ தலையில் மருதாணி எண்ணெயைத் தடவுவதால் காய்ச்சல் குறையும்.


✨️ தூக்கமின்மை உள்ளவர்கள் தலையில் மருதாணி எண்ணெயைத் தடவலாம்.

✨️ மருதாணி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிப்பதால் கல்லீரலில் உள்ள கழிவுகள் நீக்கப்படும்.

✨️ மருதாணி நீரை பருகினால் இரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சனைகள் நீங்கும்.

✨️ உடலில் வீக்கம் மற்றும் வலி உள்ள பகுதியில் மருதாணி எண்ணெயைத் தடவி மசாஜ் செய்வது நல்ல நிவாரணம் அளிக்கும்.