சிங்கப்பூர் செல்ல டிசம்பர் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!!

சிங்கப்பூர் செல்ல டிசம்பர் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!!

முதலில், இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கான டாக்குமெண்ட் பற்றி காண்போம்.

E Pass க்கு தேவையான டாக்குமெண்ட்கள் :

🔸 RMI Certificate (உங்களிடம் RMI Certificate இருந்தால் பிரிண்ட்டவுட் எடுத்து வைத்துகொள்ளுங்கள் )

🔸 Visa(IPA)

🔸 Passport

🔸 Vaccination Certificate

🔸 SG Arrival Card

🔸 Room Registration ( நீங்கள் வேலை செய்யப்போகும் கம்பெனியில் தங்குமிடத்திற்கான தகவல் மற்றும் முகவரியைத் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.)

🔸 Ticket

S Pass க்கு தேவையான டாக்குமெண்ட்கள் :

🔸 Visa(IPA)

🔸 Passport

🔸 Vaccination Certificate

🔸 SG Arrival Card

🔸 Room Registration ( நீங்கள் வேலை செய்யப்போகும் கம்பெனியில் தங்குமிடத்திற்கான தகவல் மற்றும் முகவரியைத் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.)

🔸 Ticket

NTS Permit க்கு தேவையான டாக்குமெண்ட்கள் :

🔸 Visa(IPA)

🔸 RMI Certificate

🔸 Passport

🔸 Ticket

🔸 Vaccine Certificate

🔸 Bond Paper ( இது மிக மிக முக்கியமானது.)

🔸 Room Registration ( நீங்கள் வேலை செய்யப்போகும் கம்பெனியில் தங்குமிடத்திற்கான தகவல் மற்றும் முகவரியைத் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.)

🔸 SG Arrival Card

Student Pass க்கு தேவையான டாக்குமெண்ட்கள் :

🔸 Visa(IPA)

🔸 Passport

🔸 Vaccination Certificate

🔸 Room Registration(( நீங்கள் வேலை செய்யப்போகும் கம்பெனியில் தங்குமிடத்திற்கான தகவல் மற்றும் முகவரியைத் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.)

🔸 SG Arrival Card

🔸 Ticket

TEP & TWP Pass க்கு தேவையான டாக்குமெண்ட்கள் :

🔸 Visa(IPA)

🔸 Work permit

🔸 SG Arrival Card

🔸 Ticket

🔸 Vaccination certificate

Tourist Visa க்கு தேவையான டாக்குமெண்ட்கள் :

(நீங்கள் யார் மூலமாக சிங்கப்பூருக்கு செல்ல உள்ளீர்களோ அவர்களிடம் அனைத்து தகவல்களையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அங்கு உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கவில்லை என்றால் சிங்கப்பூருக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பவும் வாய்ப்புள்ளது)

🔸 Visa

🔸 Ticket

🔸 SG Arrival Card

நீங்கள் எந்த பாஸில் செல்ல உள்ளீர்களோ அதற்கான டாக்குமெண்ட்களில் Room Registration யைத் தவிர மற்ற அனைத்து டாக்குமெண்ட்களையும் பிரிண்ட்டவுட் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

Work Permit,PCM Permit, Shipyard Permit ஆகிய பெர்மிட்களுக்கு தேவையான டாக்குமெண்ட்கள் :

🔸 Visa(IPA)

🔸 Room Registration

🔸 Onboarding Centre

🔸 Ticket (நீங்கள் பணிபுரியவுள்ள கம்பெனி On board center க்கு புக் செய்தபின், டிக்கெட் எடுப்பது நல்லது. ஏனென்றால்,நீங்கள் டிக்கெட் போட்ட பிறகு உங்களுக்கான On board centre கிடைக்காவிட்டால் உங்களுடைய டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களின் பணமும் வீணாகிவிடும். அதனால் நீங்கள் வேலை செய்யப் போகிற கம்பெனி On board center புக் பண்ணதற்குபிறகு, டிக்கெட்டுக்கு புக் பண்ணுங்கள்.)

🔸 Bond Paper

🔸 SG Arrival Card

இவை அனைத்தையும் பிரிண்ட்டவுட் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

நீங்கள் லீவுக்காக இந்தியாவிற்கு வந்திருந்தால் மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பும் போது S Pass, E Pass க்கு தேவையான டாக்குமெண்ட்களே போதுமானது.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் செல்வதற்கான தேவையான டாக்குமெண்ட்கள் பற்றி தெளிவாகக் கண்டோம். அடுத்ததாக, சிங்கப்பூரில் இருந்து இந்தியா வருவதற்கான டாக்குமென்ட்களை பற்றி காண்போம்.

நேரடியாக நீங்கள் சிங்கப்பூரில் டிக்கெட் புக் செய்து வந்து விடலாம்.

நீங்கள் சிங்கப்பூர் சிட்டிசனாக இருந்து உங்களிடம் India Citizenship இல்லையென்றால் நீங்கள் விசா அப்ளைச் செய்ய வேண்டும்.On arrival visa என்பதால் நீங்கள் இந்தியா வந்ததற்கு பிறகு கூட அப்ளை செய்யலாம்.