சிங்கப்பூர் செல்ல ஜூலை மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!!
சிங்கப்பூர் செல்ல ஜூலை மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!!
முதலில், இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கான டாக்குமெண்ட் பற்றி காண்போம்.
S Pass, E Pass, Tourist Visa, Student Visa ஆகியவற்றுக்கான தேவையான டாக்குமெண்ட்கள்:
👉 Visa
👉 Flight ticket
👉 International Vaccination Certificate
👉 SG Arrival Card
👉 Fully Vaccination Certificate
இவை அனைத்தையும் பிரிண்ட்டவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
S Pass, E Pass, Tourist visa, student visa மூலம் சிங்கப்பூர் செல்பவர்களுக்கு Quarantine கிடையாது.
Pcm, Shipyard, Work Permit ஆகியவற்றுக்கான டாக்குமெண்ட்கள்:
👉 Visa
👉 Fully vaccination certificate
👉 International Vaccination Certificate
👉 On board Centre copy
👉 SG Arrival Card
இவை அனைத்தையும் பிரிண்ட்டவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
Pcm, Shipyard, Work Permit மூலம் சிங்கப்பூர் செல்வோருக்கு Quarantine உண்டு.
நீங்கள் பணிபுரிய உள்ள கம்பெனி On board centre க்கு புக் செய்தபின், டிக்கெட் எடுப்பது நல்லது. ஏனென்றால்,நீங்கள் டிக்கெட் போட்ட பிறகு உங்களுக்கான On board centre கிடைக்காவிட்டால் உங்களுடைய டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களின் பணமும் வீணாகிவிடும். அதனால் நீங்கள் வேலை செய்யப் போகிற கம்பெனி On board centre புக் பண்ணதற்குபிறகு, டிக்கெட்டுக்கு புக் பண்ணுங்கள்.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் செல்வதற்கான தேவையான டாக்குமெண்ட்கள் பற்றி தெளிவாகக் கண்டோம். அடுத்ததாக, சிங்கப்பூரில் இருந்து இந்தியா வருவதற்கான டாக்குமென்ட்களை பற்றி காண்போம்.
சிங்கப்பூரிலிருந்து இந்தியா வருவதற்கு இதற்கு முன் Air suvidha Form யை பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால், தற்போது அது தேவையில்லை. ஏனென்றால், இந்தியாவில் கிருமி பரவல் கட்டுப்பாடுகள் இல்லை.
நேரடியாக நீங்கள் சிங்கப்பூரில் டிக்கெட் புக் செய்து வந்து விடலாம்.
நீங்கள் சிங்கப்பூர் சிட்டிசனாக இருந்து உங்களிடம் India Citizenship இல்லையென்றால் நீங்கள் விசா அப்ளைச் செய்ய வேண்டும்.On arrival visa என்பதால் நீங்கள் இந்தியா வந்ததற்கு பிறகு கூட அப்ளை செய்யலாம்.
நீங்கள் சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வதற்கு முன் 2 தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வது நல்லது.தடுப்பூசி சான்றிதழ்களையும் எடுத்து கொள்ளுங்கள்.
Follow us on : click here