அமெரிக்காவில் அஞ்சல் வழியாக கருக்கலைப்பு மாத்திரை அனுப்பிய மருத்துவர்!!
அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை தபால் வழியாக அனுப்பியதற்காக மருத்துவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரைச் சேர்ந்த மார்கரெட் கார்பெண்ட்டர் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை உட்கொண்ட பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்பட்டு அவரது உடல்நிலை மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
டெக்ஸஸ் மாநிலத்தில் கருக்கலைப்பு செய்வது குற்றமாகும்.
மேலும் அங்கு அஞ்சல் வழியாக கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்குவதற்கு அனுமதி இல்லை.
டெக்ஸஸ் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவர்கள் டெலிஹெல்த் மூலம் சேவை வழங்க உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் மார்கரெட் கார்பெண்ட்டர் எனும் மருத்துவர் உரிமமின்றி முறைகேடாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
டெக்ஸஸ் குடியிருப்பாளர்களுக்கு கார்பெண்ட்டர் சட்டவிரோதமாக செயல்பட்டதை அடுத்து, கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்கவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும் தடை செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கோரினார்.
அவர் மீதான ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 100,000 டாலர் ($134,870) அபராதம் செலுத்தும்படி கேட்கப்பட்டது.
Follow us on : click here