நீங்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல வேண்டுமா? மறக்காமல் இப்பதிவைப் பாருங்கள்!!

நீங்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல வேண்டுமா? மறக்காமல் இப்பதிவைப் பாருங்கள்!!

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வது தற்போது மிகவும் கடினமாக உள்ளது.ஏனென்றால் ஒரு வேலை வாய்ப்புக்காக நீங்கள் உங்களுடைய டாக்குமெண்ட்கள் அனுப்புவீர்கள். ஆனால் அந்த வேலை வாய்ப்பு முடிந்திருக்கும் அல்லது உங்களுடைய டாக்குமெண்ட் ரிஜெக்ட் ஆகியிருக்கலாம்.ஏன்?எதனால்? ரிஜெக்ட் செய்யப்பட்டிருக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கும். அதற்கான பதிலை இப்பதிவில் தெளிவாக காண்போம். ஒரு வேலை வாய்ப்பு தகவல் பதிவிட்டவுடன் அந்த வேலை உங்களுக்கேற்ற வேலையாக இருந்தால் உங்களுடைய டாக்குமெண்ட்களை அனுப்புவீர்கள்.நீங்கள் அப்ளை செய்ய விரும்பும் வேலைக்கு நீங்கள் மட்டும் டாக்குமெண்ட் அனுப்ப மாட்டீர்கள். பலரும் அதே வேலைக்காக அனுப்புவார்கள். அவர்களில் யார் சரியான முறையில் டாக்குமெண்ட்களை அனுப்பிய நபரே தேர்ந்தெடுக்கப்படுவர்.


முதலில் டாக்குமெண்ட் எந்த வரிசை முறையில் இருக்க வேண்டும்? டாக்குமெண்ட்டில் என்னென்ன இருக்க வேண்டும்? என்னென்ன இருக்கக்கூடாது?என்பதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.அதே போல் நீங்கள் சிங்கப்பூர் செல்வதற்கான பணத்தையும் முன்கூட்டியே ரெடி பண்ணி கொள்ளுங்கள்.

டாக்குமெண்ட்களை எந்த வரிசை முறையில் அனுப்ப வேண்டும்?

படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்களுக்கென தனித்தனியாக வரிசை முறை உள்ளது.

படித்தவர்களுக்கான டாக்குமெண்ட் வரிசை முறை :

🔸 Resume :
உங்களுடைய அனைத்து தகவல்களும் தெளிவாக இருக்கும்படி தயார் செய்யுங்கள். உங்களிடம் ஏதேனும் வேலைக்கான அனுபவம் இருந்தால் கண்டிப்பாக அதில் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஒரு பக்கத்தில் அனைத்து தகவல்களும் இருக்குமாறு Resume இருக்க வேண்டும்.

🔸 Passport copy (Front & Back)(அடுத்தடுத்து தனித்தனியாக இருக்க வேண்டும்)

🔸 10th marksheet

🔸 12th marksheet

🔸 Course completed certificate(Diploma/Degree certificate)

🔸 Fully vaccination international certificate

🔸 Full size with white background photo (Studio வில் எடுத்து அதை PDF ஆக வைத்துக்கொள்ளுங்கள்)

படிக்காதவர்களுக்கான டாக்குமெண்ட் வரிசை முறை :

🔸 Resume :
உங்களுடைய அனைத்து தகவல்களும் இருக்க வேண்டும். உங்களிடம் அனுபவம் இருந்தால் அதையும் குறிப்பிட வேண்டும். மேலும் நீங்கள் என்ன படித்துள்ளீர்களோ அதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். உங்களுக்கு Resume எப்படி தயார் செய்வது தெரியவில்லை என்றால், நெட்சென்டருக்கு சென்றால் அவர்களே உங்களுக்கு தயார் செய்து கொடுப்பார்கள்.

🔸 Passport copy (Front & Back) (தனித்தனியாக அடுத்தடுத்து இருக்க வேண்டும்.)

🔸 8th, 10th, 12th certificate (நீங்கள் என்ன படித்தீர்களோ அதற்கான சான்றிதழ் இருந்தால், சேர்த்து கொள்ளுங்கள்.)

🔸 Fully vaccination international certificate

🔸 Full size with white background photo (Studio வில் எடுத்து அதை PDF ஆக வைத்துக்கொள்ளுங்கள்)

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து டாக்குமெண்ட்களையும் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும்.நெட்சென்டருக்கு சென்று உங்களுடைய டாக்குமெண்ட்களை Scan செய்து ஒரே PDF க்குள் இருக்குமாறு தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுடைய மொபைல் அல்லது Camscanner மூலம் scan செய்தால் ஏதேனும் பிழைகள் வர வாய்ப்புள்ளது.நீங்கள் அனுப்பிய டாக்குமெண்ட்டில் பிழை இருந்தால் உங்களுக்கு வரக்கூடிய ip,visa என முக்கியமானவைகளில் அதே பிழைகள் இருக்கக்கூடும். இதனால் நீங்கள் சிங்கப்பூர் செல்ல முடியாமல் கூட போக வாய்ப்புள்ளது.ஆதலால் உங்களுக்கு அருகே உள்ள நெட்சென்டருக்கு சென்று ஓர் PDF க்குள் இருக்குமாறு தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.(படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்களுக்கு இது பொதுவானவை)

அடுத்ததாக நீங்கள் வேலை செய்வது போன்ற வீடியோ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், ஒரு சில வேலைகளுக்கு நீங்கள் வேலை செய்வது போன்ற வீடியோ கேட்பார்கள். நீங்கள் முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. (எ. கா : CNC Operator, Parotta master, Chef என பல வேலைகள் உள்ளன) உங்களுக்கான வேலை வாய்ப்பு வரும்பொழுது உடனடியாக அனுப்பலாம்.(படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்களுக்கு இது பொதுவானவை)

இவ்வாறு உங்களுடைய டாக்குமெண்ட்களை சரியான முறையில் முன்னதாகவே தயார் செய்து வைத்துக்கொண்டால் உங்களுக்கான வேலை வரும்போது காலம் தாழ்த்தாமல் அனுப்பினால் நீங்கள் சிங்கப்பூர் செல்வதற்கான வாய்ப்புள்ளது.