நீங்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டுமா? உங்களுக்கான பதிவு தான் இது!!

SGTAMILAN இணையதளத்தில் நாள்தோறும் அதிக வேலை வாய்ப்புகளைப் பதிவிட்டு வருகிறோம் .அந்த வேலை வாய்ப்புகள் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சி வாயிலாக பெறப்பட்டு பதிவிட்டு வருகிறோம். அவர்கள் தரும் அனைத்து வேலைகளையும் பதிவிடாமல் சம்பளம் மற்றும் சர்வீஸ் தொகையை கருத்தில் கொண்டு பதிவிட்டு வருகிறோம்.
மேலும் உங்களுடைய டாக்குமெண்ட்களை எவ்வாறு அனுப்ப வேண்டும் என்பதை பற்றியும் தெளிவாக கூறியுள்ளோம்.நாங்கள் பதிவிடும் வேலைகளில் உங்களுக்கு தகுதிகள் அனைத்தும் சரியாக இருந்தால் உங்களுடைய டாக்குமெண்ட்களை ஏஜென்சிக்கு அனுப்பப்படும். பின் ஏஜென்சியில் இருந்து உங்களைத் தொடர்பு கொள்வார்கள். எவ்வளவு சம்பளம், உங்களுக்கு அந்த வேலை பற்றி அனுபவம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்வார்கள். அதோடு வேலை பற்றிய விவரங்களையும் ,அது எப்படி இருக்கும் என்பதை பற்றியும் கூறுவார்கள்.இந்த வேலைக்கு செல்ல உங்களுக்கு சம்மதமா என்று கேட்பார்கள். உங்களுக்கு அனைத்தும் சரி என்றால் ஏஜென்சிக்கு பணம் செலுத்த வேண்டும். ip,விசா வந்த பிறகே முழு பணத்தையும் கட்ட சொல்வார்கள்.அவர்கள் உங்களை நல்லபடியாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பார்கள்.
மேலும் வேலை வாய்ப்புகளை வீடியோவாகவும் போடுகின்றோம். பலர் சிங்கப்பூரில் இருந்து கொண்டே குறைவான சம்பளம் இந்த வேலைக்கு சென்றால் எப்படி கடனை அடைப்பது அதனால் இந்தியாவிலேயே இருந்துவிடலாம் என்று கூறுவார்கள். அதை நம்ப வேண்டாம். அவர்கள் சிங்கப்பூரில் இருந்து கொண்டே இப்படி நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை கூறுவார்கள். முதன்முறையாக சிங்கப்பூர் செல்பவர்களுக்கு குறைந்த சம்பளம் தான் முதலில் கொடுப்பார்கள். நீங்கள் எந்த பெர்மீட்டில் சென்றாலும் குறைந்த சம்பளம் தர மாட்டார்கள். வேலைக்கு ஏற்ப முன் அனுபவம் இருந்தால் தகுதிக்கேற்ப சம்பளம் தருவார்கள். அதேபோன்று சிங்கப்பூரில் சம்பள உயர்வு அதிகமாக இருக்கும் .அதனால் தான் நிறைய பேர் சிங்கப்பூரை தேர்வு செய்கின்றனர். அதேபோல் அரபு நாடுகளில் ஒரு சில கம்பெனிகளைத் தவிர மற்ற கம்பெனிகள் சம்பளத்தை உயர்த்த மாட்டார்கள். ஆனால் சிங்கப்பூரில் போனஸ், பதவி உயர்வு போன்றவை நீங்கள் சென்று குறைந்த நாட்களில் கிடைக்கும்.
நீங்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்த பிறகு உங்கள் தகுதிகளை நீங்கள் உயர்த்திக்கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் நிறைய கோர்ஸ்கள் இருக்கின்றன. அதில் உங்களுக்கு எது தேவையோ அதை தேர்வு செய்து அதற்கான வகுப்புகளுக்கு செல்லலாம். நீங்கள் ஏதேனும் கோர்ஸ் முடித்திருந்தால் கம்பெனியில் அந்த வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டால் உங்களை தேர்வு செய்வார்கள்.மேலும் சம்பளமும் உயர்த்தப்படும்.சிங்கப்பூருக்கு எந்த வேலைக்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு சென்றால் நீங்கள் செலவு செய்ததை சம்பாதித்து விடலாம். சரியான முறையில் எப்படி சிங்கப்பூர் செல்லலாம் என்பது குறித்த வீடியோக்கள் KING ARUN youtube சேனலில் இருக்கிறது.
உங்களுக்கான வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.SGTAMILAN இணையப்பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan