மாய்ஸ்ரைசர் யூஸ் பண்றீங்களா..??? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!!!

பெண்கள் முகத்தை மென்மையாக வைத்திருக்க மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் சருமத்திற்கு பொருந்தாத மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, மாய்ஸ்சரைசரை சரியாகப் பயன்படுத்துவது முக்கியமாகும்.
👉 மாய்ஸ்ரைசர் சரும வறட்சியைத் தடுக்க உதவுகிறது.சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
👉 இது சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது.
👉 உங்கள் சருமத்தை மென்மையாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வைட்டமின் ஈ எண்ணெயால் செய்யப்பட்ட மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்.
👉 வறண்ட சருமத்திற்கு இணையாக எண்ணெய் பசை உள்ள சருமத்திற்கும் ஏற்ற மாய்ஸ்சரைசர் உள்ளது.
👉 நமது சரும வகைக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
👉 வெயிலால் உங்கள் சருமம் நிறம் மாறுவதைத் தடுக்க வெளியே செல்வதற்கு முன் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்.
👉 இந்த மாய்ஸ்சரைசர் இயற்கை வைட்டமின்களால் தயாரிக்கப்படுவதால், அதைப் பயன்படுத்தும்போது சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டும் உணர்வைத் தருகிறது.
👉 பொலிவிலந்த சருமத்தை பிரகாசமாக்க மாய்ஸ்சரைசர் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம்.
👉 பருவ காலத்திற்கு ஏற்ப மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது முக்கியம். குளிர்காலத்தில் சிலரின் சருமம் வறண்டு போகும். அதுவே சிலருக்கு கோடை காலத்தில் வறண்டு போகும். அவரவர் சரும வகைக்கு ஏற்ப மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது அவசியம்.
👉 மாய்ஸ்சரைசர் பயன்படுத்துபவர்கள் அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும். முகத்தைக் கழுவிய பின் மாய்ஸ்சரைசர் தடவுவது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
👉 வறண்ட சருமம் உள்ளவர்கள் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதை நிறுத்தினால் பிரச்சினைகள் ஏற்படலாம்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan