Latest Singapore News

சிங்கப்பூரில் நிலம் வழியாக பயணம் செய்ய கடப்பிதழைக் காட்ட தேவையில்லையா?

சிங்கப்பூரில் புதிய நிலையம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கூடுதலாக சுமார் 800 தானியக்கப் பயண முகப்புகளைச் சிங்கப்பூர் விமான நிலையங்களில் அமைக்கப்படவிருக்கின்றன.

தானியக்க பயணம் முகப்புகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்படும்.

கூடுதலான பயணிகளைக் கையாளவும், ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் தானியக்க முகப்புகள் உதவும்.

ஒரே இடத்தில் வாடிக்கையாளர் சேவையை வழங்க புதிய நிலையம் அமைக்கப்படவிருக்கிறது.

அது அடுத்த ஆண்டு தயாராகிவிடும்.

அந்த நிலையத்தில் கடப்பிதழ், அடையாள அட்டை போன்றவற்றை விநியோகிக்கும் சேவையும் வழங்கும்.

நிலம் வழியாக பயணம் செய்பவர்கள் QR குறியீட்டைப் பயன்படுத்தி குடி நுழைவு வாயிலைக் கடந்து செல்லலாம்.

இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு முதல் செயல்பட தொடங்கும்.

நிலம் வழியாக பயணம் செய்பவர்கள் கடப்பிதழைக் காட்ட வேண்டியிருக்காது.

கார்களுக்கான முழுமையான தானியக்க முறை உட்லண்ஸில் 2028-ஆம் ஆண்டிலிருந்தும், துவாசில் 2026-ஆம் ஆண்டிலிருந்தும் செயல்படுத்தப்படும்.

சட்ட, உள்துறை அமைச்சர் குடிநுழைவு, சோதனை சாவடிகள் ஆணையத்தின் வேலை திட்ட கருத்தரங்கில் பேசினார்.

தானியக்க முறையைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகாரிகளை வேறு பணிகளுக்கு அனுப்ப உதவியாக அமையும்.

தானியக்க இயந்திரம் எளிய வேலைகளை செய்து விட்டால், பயணிகளுக்கு தனிப்பட்ட சேவைகளை வழங்குவது, பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் ஈடுபடலாம் என்று கூறினார்.