உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்ட நாடு எது தெரியுமா?
உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
VisaGuide.World இணையத்தளம் அந்த தகவலை வெளியிட்டது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்தது.
தரவரிசை பட்டியல் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது :
▪️விசா இல்லாத நுழைவு
▪️மின்னணு பயணச் சான்றிதழ்
▪️மின்னணு விசா
▪️தரையிறங்கியதும் கொடுக்கப்படும் விசா
199 நாடுகள் மற்றும் வட்டாரங்களில் சிங்கப்பூர் 91.27 புள்ளிகள் பெற்றுள்ளது.
தரவரிசைப் பட்டியலில் Finland,Spain,Japan,Denmark,Italy ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 159 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்.
10 நாடுகள் மற்றும் வட்டாரங்களுக்கு மின்னணு பயணச் சான்றிதழுடன் செல்லலாம்.
26 நாடுகள் மற்றும் வட்டாரங்களுக்கு சென்று தரையிறங்கியதும் விசா வழங்கப்படும்.
14 நாடுகள் மற்றும் வட்டாரங்களுக்கு மின்னணு விசாவுடன் செல்லலாம்.
17 நாடுகள் மற்றும் வட்டாரங்களுக்கு செல்ல மட்டுமே விசா தேவை.
Follow us on : click here