Latest Singapore News

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் வருடாந்திர சம்பளம் எவ்வளவு என்பது உங்களுக்கு தெரியுமா?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Goh Choon Phong – யின் வருடாந்திர சம்பளம் உயர்ந்துள்ளது.

சுமார் 88 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அவர் கடந்த நிதியாண்டில் மொத்தம் 6.73 மில்லியன் வெள்ளி சம்பளமாக பெற்றார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் வருடாந்திர நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கு முந்தைய ஆண்டில் சுமார் 3.59 மில்லியன் வெள்ளி சம்பளம் பெற்றார்.

அந்த நிதியாண்டில் 962 மில்லியன் வெள்ளி நஷ்டத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் எதிர்கொண்டது.

கிருமிப்பரவல் காலகட்டமான 3 நிதியாண்டுகளிலும் தொடர்ந்து இழப்பைச் சந்தித்தது.

பயணங்களின் தேவை அதிகரித்து வரும் சூழலில் கடந்த நிதியாண்டில் 2.16 பில்லியன் வெள்ளி லாபத்தை ஈட்டியுள்ளது.