அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு இந்திய பிரதமர் கொடுத்த பரிசு என்ன என்பது தெரியுமா?
சென்ற வருடம் யாரெல்லாம் யார் யாருக்கு என்னென்ன பரிசுகள் வழங்கினார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு இந்திய பிரதமர் நரேந்திர
மோடி அவர்கள் 20,000 டாலர் மதிப்புள்ள 7.5 கேரட் வைர மோதிரத்தை பரிசாக வழங்கினார்.
14,063 டாலர் மதிப்புள்ள Brooch எனும் உடை ஊசியை அமெரிக்காவுக்கான உக்ரேனியர் தூதர் பரிசாக திருமதி பைடனுக்கு வழங்கினார்.
அதிபர் பைடனும் நல்ல பரிசைப் பெற்றுள்ளார்.
தென் கொரிய அதிபர் 7,100 டாலர் மதிப்புள்ள புகைப்படத் தொகுப்பு ஒன்று வழங்கினார்.
மங்கோலியப் பிரதமரும் 3495 டாலர் மதிப்புள்ள மங்கோலிய வீரர்களின் சிலையை பரிசாக வழங்கினார்.
வெளிநாட்டு தலைவர்களிடமிருந்து பெறும் பரிசுகளின் விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.
480 டாலருக்கு அதிகமாக இருந்தால் அவற்றை தெரிவிப்பது கட்டாயம் என்று சட்டம் கூறுகிறது.
விலை உயர்ந்த சில பரிசுகள் தேசிய ஆவண பிரிவுக்கு அனுப்பப்படும் அல்லது அதிகாரப்பூர்வ கண்காட்சிகளில் காட்சிக்கு வைக்கப்படும்.
20000 டாலர் மதிப்புள்ள வைர மோதிரம் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக வெள்ளை மாளிகையில் வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
மற்ற பரிசுகள் தேசிய ஆவண பிரிவுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வெளியிடப்பட்ட அமெரிக்க அரசாங்கத்தின் வருடாந்திர கணக்கில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
Follow us on : click here