சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் பொதுவான புகார்கள் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?

வெளிநாட்டு ஊழியர்கள் அளித்த புகார்கள் குறித்து சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது.கடந்த 5 ஆண்டுகளில் என்னென்ன புகார்கள் வந்துள்ளன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்து பதில் அளித்தார்.

ஊழியர்களின் பொதுவான புகார்களாக ஐந்து புகார்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஐந்து புகார்களும் கடந்த ஐந்தாண்டுகளில் ஊழியர்கள் அளித்த முக்கிய புகார்கள் என்று குறிப்பிட்டார்.

லஞ்சம் கொடுப்பது, ஊழியர்களின் பணத்தை ஏஜென்சி திருப்பி தரவில்லை, வேறு வேலைகளுக்கு சட்டவிரோதமாக அனுப்புவது, சட்டவிரோத வேலைவாய்ப்பு,அதிக சம்பளம் தருவதாக கூறி ஏமாற்றுவது ஆகிய ஐந்தும் ஊழியர்கள் கூறும் முக்கிய புகார்கள் என்றார்.

FWMOMCare செயலி மற்றும் FAST ஆதரவு குழு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு, ஊழியர்களின் புகார்களை விரைவாக கவனிக்க முடிவதாக கூறினார்.