கடலை மாவால் முகத்தில் ஏற்படும் அதிசயங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா…???

கடலை மாவால் முகத்தில் ஏற்படும் அதிசயங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா...???

அனைவருக்கும் தங்களது சருமம் பொலிவான தோற்றத்துடன் இருக்க வேண்டுமென்பது நினைப்பதுண்டு. சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது எல்லா வயதினருக்கும் அவசியமான ஒன்றாகும். அதற்காக சருமத்தை மெருகேற்ற பியூட்டி பார்லர் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கு வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களைக் கொண்டு பளபளப்பான சருமத்தைப் பெறலாம். அத்தகைய ஒரு சிறந்த பொருள் தான் இந்த கடலை மாவு. இது பல தலைமுறை ஆக சருமத்தை பாதுகாக்கும் பொருளாக இருந்து வருகிறது. கடலை மாவு பொடியானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்த ஏற்றது.

இதில் காணப்படும் இயற்கை என்சைம்கள் மற்றும் கலவைகள் பல ஆண்டுகளாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஏனெனில் அவை பல்வேறு தோல் பிரச்சினைகளை சரி செய்கின்றது.கடலை மாவு சருமத்தில் ஏற்படுத்தும் அசாதாரண மாற்றங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சருமத்தை சுத்தப்படுத்தும் கடலை மாவு:

கடலை மாவு சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துகிறது. இது சருமத் துளைகளில் ஆழமாக ஊடுருவி ஒரு சிறந்த முக சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. இது நாள் முழுவதும் துளைகளில் சேரும் அதிகப்படியான அழுக்கு மற்றும் எண்ணெயை திறம்பட நீக்குகிறது.

ஆழமான சுத்திகரிப்பு நடவடிக்கை வெள்ளை புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகள் உருவாவதைத் தடுக்கிறது மற்றும் கறைகள் மற்றும் கரும்புள்ளிகள் இல்லாமல் சருமத்தை தெளிவாக வைத்திருக்கும். கடலை மாவை தினமும் பயன்படுத்துவதால் சருமம் தெளிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

சருமத்தை மெருகேற்றும் கடலை மாவு:

கடலை மாவு முகத்தில் வடியும் எண்ணெய்ப் பசையை கட்டுப்படுத்துகிறது.முகத்தில் எண்ணெய் பசை உள்ளவர்கள் அதிகம் முகப்பருவால் அவதிப்படுவர்.இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் முகத்திற்கு கடலை மாவு பயன்படுத்த வேண்டும்.

கடலை மாவு சிறந்த எண்ணெய் உறிஞ்சும் பண்புகளைக் கொண்டிருப்பதால், சருமத்தின் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை சீராக்கி, கருமத்தின் அடியில் உள்ள எண்ணெயை உடனடியாக உறிஞ்சுகிறது.

இளமையான தோற்றத்தை தரும் கடலை மாவு:

கடலைமாவில் வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.இது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வயதானதை தாமதப்படுத்துகிறது. இது முகத்தில் தோன்றும் மெல்லிய கோடுகள், மந்தமான தன்மை மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது. குறிப்பாக 40 வயதை எட்டும் பெண்கள் கடலை மாவை அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.

சருமத்தின் PH அளவை சீராக்கும் கடலை மாவு:

கடலை மாவு தோலின் pH அளவை சமநிலைப்படுத்துகிறது.சருமத்தின் pH அளவை பராமரிக்கும் குறைந்த அமிலத்தன்மை கொண்ட pH ஐ கொண்டுள்ளது.இது தோல் வறட்சி, எண்ணெய் பசை மற்றும் உணர்திறன் பிரச்சினைகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்க உதவுகிறது. கடலை மாவு பேஸ் பேக்கைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் pH அளவைப் பராமரிக்கலாம்.இது ஒட்டுமொத்தமாக அனைத்துவித சரும பிரச்சனைகளுக்கும் ஏற்றது.