நீங்கள் சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு பற்றியும்,இதற்கு முன் நீங்கள் சிங்கப்பூர் வந்து வேலை செய்துவிட்டு இந்தியா திரும்பி வந்ததற்கு பிறகு எந்த வயதில் மீண்டும் சிங்கப்பூர் வரலாம் என்பதைப் பற்றியும் முழு விவரத்துடன் காண்போம்.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான விதிமுறைகளை Ministry of Manpower (MOM) தான் முடிவு செய்கிறது. அவர்கள்தான் வயது வரம்பையும் தீர்மானிப்பார்கள்.
கம்பெனிகள் வேலைக்கு ஆட்கள் எடுக்க வேண்டுமென்றால், முதலில் MOM – இல் அப்ளை செய்வார்கள்.
வெளிநாட்டு ஊழியருக்கு சராசரி சம்பளம், அவர்களுக்கு என்னென்ன தேவை, வயது வரம்பு அனைத்தையும் தீர்மானிப்பது MOM.
MOM அனுமதித்தால் மட்டுமே சிங்கப்பூர் வர முடியும்.
நீங்கள் சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு 55.
டெஸ்ட் அடித்து Work Permit மூலம் சிங்கப்பூர் வருபவர்கள் 50 வயதுக்குள் இருப்பவர்கள் வர முடியும்.
புதிதாக டெஸ்ட் அடித்தவர்களாக இருந்து 50 வயதுக்குமேல் இருந்தால் சிங்கப்பூர் வர முடியாது.
நீங்கள் Work Permit, Shipyard Permit, PCM Permit இல் அப்ளை செய்தால் ரிஜெக்ட் ஆகிவிடும்.
ஏற்கனவே, நீங்கள் சிங்கப்பூரில் வேலைச் செய்திருந்து டெஸ்ட் அடித்தவர்களாக இருந்தால் உங்களுக்கு Approval ஆகும்.
S Pass, E Pass மூலம் வர உள்ளவர்கள் 50 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு Approval ஆகும்.
ஆனால், சில கம்பெனிகள் வயது அதிகம் உள்ளவர்களை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். ஏனென்றால், அவர்களுக்கு அனுபவம் அதிகம் இருப்பதால் அதிகப்படியான சம்பளம் கொடுக்க வேண்டும். வயது மூப்பு என்பதால் மெடிக்கல் டெஸ்டில் ஏதேனும் பிரச்சினைகள் வரும். சுறுசுறுப்பாக வேலை செய்வார்களாக என்று யோசித்து தயக்கம் காட்டுவார்கள்.
நீங்கள் சிங்கப்பூர் U-Turn Worker ஆக இருந்தால், Work Permit மூலம் 55-60 வயது இருப்பவர்கள் வரலாம். கம்பெனி முயற்சி செய்தால் அதற்கு அதிகமான வயது இருந்தாலும் வரலாம்.
S Pass, E Pass மூலம் புதிதாக வருபவர்கள் 51 வயதுக்குமேல் இருப்பவர்களாக இருந்தால் கம்பெனி முயற்சி செய்தால் வரலாம்.