குழந்தைக்கு ட்ரை பண்றீங்களா...!!! அப்போ நிச்சயம் இதை தெரிஞ்சுக்கோங்க...!!!!
சிங்கப்பூர்: கே.கே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பப்படும் தம்பதியர்களுக்கு இலவச மரபணு பரிசோதனை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் இது தொடர்பாக மருத்துவமனை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) KKH தலைமையிலான SingHealth Duke-NUS தாய் மற்றும் குழந்தை சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்துடன் (MCHRI) ஒரு கூட்டு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இது ஆசியாவின் முதல் திட்டம் என்று கூறப்படுகிறது.Temasek அறக்கட்டளையின் PREDICT திட்டம் ஆசிய மக்களை பாதிக்கும் 80க்கும் மேற்பட்ட மரபணு கோளாறுகளை கண்டறிய உதவுகிறது.
கர்ப்பத்திற்கு முன் அல்லது கர்ப்ப காலத்தில் சோதனைகள் செய்யப்படலாம்.கர்ப்ப காலத்தில் மருத்துவரை சந்திக்கும் தம்பதியினர் இத்திட்டம் குறித்து தெரிவிக்கலாம்.
தம்பதியினர் தாமாகவே முன்வந்து மருத்துவமனையை தொடர்பு கொண்டும் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.பைலட் திட்டம் இந்த ஆண்டு முதல் தொடங்கி 2027 வரை இலவசமாக இயங்கும்.
குழந்தைகளையும் பாதிக்கக்கூடிய தீவிரமான மரபணு கோளாறுகள் தம்பதியருக்கு உள்ளதா என்பதைக் கண்டறிவதே இதன் நோக்கம்.
குறிப்பாக கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் ஊனம்,பைனல் சதைச் சிதைவு, குறைந்த வளர்ச்சி உள்ளிட்ட கடுமையான கோளாறுகள் ஏற்படாமல் இருக்க இந்த சிகிச்சை உதவும் என்று கூறப்படுகிறது.
குடும்பக் கட்டுப்பாடு குறித்து சரியான முடிவுகளை எடுக்கவும் இது உதவும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது குறிப்பிட்ட சில குறைபாடுகளுக்கு மட்டுமே சோதனை நடத்தப்படுகிறது.
புதிய திட்டம் மேலும் விரிவான சோதனையை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on : click here