சிங்கப்பூரில் மருந்தகங்களில் பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படாதா?
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முடிவு செய்துள்ளது NUH மருந்தகங்கள்…
சிங்கப்பூர்: 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையானது அதன் கழிவுகளை 60 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக மருந்தகங்களில் பயன்படுத்தப்படும் சிறிய பிளாஸ்டிக் பைகள் கட்டங்கட்டமாக நிறுத்தப்படும் என்று கூறியது.
இந்த நடவடிக்கை பசுமை முயற்சியின் ஒரு பகுதி என்று தெரிவித்தது
.
இதன் மூலம் ஆண்டுக்கு 480,000 சிறிய பிளாஸ்டிக் பைகள் சேமிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
நேஷனல் யுனிவர்சிட்டி மருத்துவமனை பல்வேறு பசுமை முயற்சிகள் மூலம் மேற்கொண்டது. அது ஒரு வருடத்தில் 320,000 வெள்ளி வரை மின்சாரக் கட்டணத்தைச் சேமித்தது தெரியவந்துள்ளது.
உதாரணமாக, ஆபரேஷன் அறைகள் பயன்பாட்டில் இல்லாதபோது, காற்று சுழற்சியின் வேகத்தை குறைத்ததாக தெரிவித்தது.
இதனால் மின் பயன்பாடு 40 சதவீதம் வரை குறைந்துள்ளது.
நோயாளிகளுக்குத் தேவைப்படாத உணவின் அளவு 30 கிராம் குறைத்து வழங்கப்படுவதால் உணவு வீணாவது குறைக்கப்படுகிறது.
இதன் மூலம் வருடத்திற்கு 2,000 கிலோகிராம் வரை அரிசி வீணாவதை குறைக்க முடியும் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கூடுதல் உணவு தேவைப்படும் நோயாளிகள் அவர்களுக்கு தேவையான உணவை கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.
2045க்குள் கழிவு இல்லாத சூழலை உருவாக்குவதே அதன் நோக்கம் என்றும், அந்த இலக்கை அடைய மருத்துவமனை விரும்புகிறது என்றும் தெரிவித்தது.
Follow us on : click here