குழந்தைகளுக்கு மூக்கடைப்பு பிரச்சனையா..??? அப்போ... இந்த பாட்டி வைத்தியத்தை கடைபிடிங்க...!!!

பருவநிலை மாற்றம் மற்றும் பாக்டீரியா தொற்று என்ற காரணத்திற்காக குழந்தைகள் அடிக்கடி சளி, இருமல் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். இதனால் சில குழந்தைகள் மூக்கில் அடைப்பு ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டுவர். சமீப காலமாக மூக்கடைப்பு பிரச்சினையால் அவதியுரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய முறைகளை பின்பற்றினால் பயனடையலாம்.
தீர்வு 01:
✨️ தண்ணீர் – ஒரு கப்
✨️ யூகலிப்டஸ் எண்ணெய் – மூன்று சொட்டுகள்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஆவி வரும்வரை கொதிக்க விடவும். பின்னர் இந்த தண்ணீரில் மூன்று சொட்டு யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து ஆவி பிடிக்க வைக்கவும். இப்படி ஆவி பிடிப்பதால் சுவாச பாதையில் உள்ள கெட்டிச் சளிகள் கரைந்து வெளிவரும்.
தீர்வு 02:
✨️ கடுகு எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்
✨️ பூண்டு பல் – இரண்டு
ஒரு கரண்டியில் இரண்டு தேக்கரண்டி கடுகு எண்ணெயைச் சூடாக்கி, பொடியாக நறுக்கிய இரண்டு பல் பூண்டுகளைச் சேர்க்கவும்.இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். இந்த எண்ணெயை ஆறவைத்து மூக்கில் தடவினால், அடைபட்ட சளி தளர்ந்து வெளியேறும்.
தீர்வு 03:
✨️ தண்ணீர் – ஒரு கப்
✨️ கற்பூரம் – ஒன்று
✨️ இலவங்கப்பட்டை – இரண்டு
✨️ துளசி இலைகள் – இரண்டு தேக்கரண்டி
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் இரண்டு இலவங்கப்பட்டை மற்றும் இரண்டு டீஸ்பூன் துளசி இலைகளை போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும். பிறகு இதில் ஒரு கற்பூரத்தை சேர்த்த ஆவி பிடித்தால் மூக்கடைப்பு நீங்கும்.
தீர்வு 4:
✨️ வேப்ப இலை – இரண்டு கொத்துகள்
✨️ தண்ணீர் – ஒரு கப்
ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து சூடாக்கவும். பின் அதில் இரண்டு கொத்து வேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இந்த நீரைக் கொண்டு ஆவி பிடித்தால் மூக்கடைப்பு குணமாகும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan