நேற்று (ஜூலை 6 ) காலை M1 நிறுவனத்தின் சேவையில் தடங்கல் ஏற்பட்டதாக Downdetector.sg கூறியது.
காலை 9 மணியிலிருந்து தடங்கல் குறித்து புகார் வந்ததாக இணையதளம் குறிப்பிட்டது.
பயனீட்டாளர்களில் சிலர் மொபைல் மூலம் மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறியிருந்தனர் .
சிலர் காலை 9.30 மணியளவில் M1 நிறுவனத்தின் Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இது போன்று சுமார் 10 பேர் பதிவிட்டுள்ளதைக் காண முடியும்.
இன்னும் ஒரு சிலர் இணைய தொடர்பு இல்லை என்றும் கூறினர்.
நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
மொபைல் போனை மீண்டும் restart செய்யும்படி கூறினார். ஆனால், அது பலன் அளிக்க வில்லை என்றும் கூறினர்.
இவ்வாறு கூறியவர்களிடம் இருந்து மேல் விவரங்களை தனிப்பட்ட முறையில் பெற்றுகொண்டனர்.
அதிகமான புகார்கள் காலை 9.30 மணியளவில் வந்ததுள்ளதாக தெரிகிறது.
புகார்களின் எண்ணிக்கை 11 மணியளவில் படிப்படியாக குறைய தொடங்கியது.