சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் இறங்கியுள்ள Disney Land ஊழியர்கள்!!

சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் இறங்கியுள்ள Disney Land ஊழியர்கள்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் டிஸ்னிலேண்டின் 200 ஊழியர்கள் கேளிக்கை பூங்காக்களுக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

சம்பள உயர்வு உள்ளிட்ட சில பிரச்சனைகளுக்காக அவர்கள் போராடி வருவதாக AFP செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “Indiana Jones” மற்றும் “Star wars” போன்ற திரைப்படங்களை நினைவூட்டும் வகையில் ஆடைகளை அணிந்திருந்தனர்.

தொழிற்சங்கங்கள் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் 14,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ராட்டினம் ஓட்டும் தொழிலாளர்களில் இருந்து மிட்டாய் விற்கும் தொழிலாளர்கள் வரை போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

“Mickey would want fair pay” மற்றும் “Dinsney,don’t be the villain” போன்ற வாசகங்களுடன் பதாகைகளை வைத்திருந்தனர்.

நியாயமான சம்பளம் வேண்டும் இதுவே எங்கள் கோரிக்கை என்று டிஸ்னிலேண்டின் ஊழியர்களில் ஒருவர் AFP செய்தியிடம் கூறினார்.

கடந்த ஏப்ரலில், தீம் பார்க் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 கலிபோர்னியா தொழிற்சங்கங்களுடன் டிஸ்னி பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால் இதுவரை எந்த முடிவும் இல்லை. உலகின் மகிழ்ச்சியான இடங்களில் ஒன்றாக கருதப்படும் டிஸ்னி, தொழிலாளர்களை மிரட்டுவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.