Dyson நிறுவனத்தின் திடீர் ஆட்குறைப்புச் சம்பவத்தால் ஊழியர்கள் அதிருப்தி!!

Dyson நிறுவனத்தின் திடீர் ஆட்குறைப்புச் சம்பவத்தால் ஊழியர்கள் அதிருப்தி!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இயங்கி வரும் Dyson நிறுவனம் திடீரென எதிர்பாராத பணிநீக்கங்களைச் செய்தது.

இது ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு Dyson நிறுவனம் பிரிட்டனில் 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

Dyson நிறுவனத்தின் தலைமையகம் சிங்கப்பூரில் உள்ளது.

பணிநீக்கம் சிங்கப்பூரைப் பாதிக்காது என்று கூறிய நிறுவனம் தற்போது திடீரென ஆட்குறைப்பு செய்தது.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நிறுவனத்திடமிருந்து தங்களைத் தனித்தனியாகச் சந்திக்கும்படி மின்னஞ்சல் பெற்றதாக கூறினர்.

தனிமைச் சந்திப்பின் போது பணிநீக்கங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டதாக கூறினர்.

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உற்பத்தி மற்றும்
கொள்முதல் துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது.

Dyson நிறுவனம் இதுவரை எத்தனை ஊழியர்களை பணிநீக்கம் செய்தது என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான கேள்விகளுக்கு நிறுவனம் பதிலளிக்க மறுத்துவிட்டது.