“இளைஞர்களுக்கு தவறான தகவல் குறித்த பகுத்தறிவு முக்கியம்”- மூத்த அமைச்சர் திரு.லீ!!

"இளைஞர்களுக்கு தவறான தகவல் குறித்த பகுத்தறிவு முக்கியம்"- மூத்த அமைச்சர் திரு.லீ!!

சிங்கப்பூர்: மூத்த அமைச்சர் லீ சியன் லூங், ஊடகம் சார்ந்த அறிவு மற்றும் கேள்வி கேட்கும் தன்மை கொண்ட கல்வி போன்றவை இளைஞர்களுக்கு இருப்பது அவசியம் என்றும் அதனால் சமூகத்தில் பரவுகின்ற தவறான தகவலை சமாளிக்க முடியும் என்று கூறினார்.

இணையத்தின் தாக்கம் குறித்து இளையர் மாநாட்டில் திரு லீ பேசினார்.

இந்த மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் எழும் தவறான தகவல்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான பதில்கள் அதிகரித்துள்ள போக்கால் அந்த தகவலை பற்றிய உண்மை நிலையின் பகுத்தறிவு என்பது மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் இங்குள்ள சமூகத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவம் பற்றி திரு லீ பேசினார்.

சிங்கப்பூரர்கள் அனைவரிடமும் அன்பான முறையிலும் கனிவான முறையிலும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அதே நேரத்தில், வெளிநாட்டு ஊழியர்களும் இங்குள்ள நடைமுறைகளை புரிந்து கொண்டு சமூகத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் திரு.லீ இனப் பிரச்சினைகளைப் பற்றியும் பேசினார்.