அருங்காட்சியகத்தின் விளம்பரத்தை நம்பி ஏமாற்றம் அடைந்த மக்கள்...!!!
சீனாவில் உள்ள மீன் அருங்காட்சியகத்திற்கு வந்த பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இம்மாத தொடக்கத்தில் குவாங்டோங் மாகாணத்தின் ஷென்ஸென் நகரில் Xiaomeisha Ocean World எனும் மீன் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
அதனால் உலகின் மிகப்பெரிய திமிங்கல சுறா அங்கு இருப்பதாக அருங்காட்சியகம் விளம்பரம் செய்தது.
எனவே சுறாவை காணும் ஆர்வத்தில் மக்கள் வரிசையில் காத்திருந்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அருங்காட்சியகத்தை பார்வையிட லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.
முதல் 7 நாட்களிலே 100,000க்கும் அதிகமானோர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.
ஆனால் அருங்காட்சியகத்தில் இருந்ததோ உண்மையான சுறா இல்லை.சுறா போன்ற ஒரு இயந்திரம்.
இந்த இயந்திரத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதைக் கண்டு நெட்டிசன்களும் பார்வையாளர்களும் கடும் கோபத்திற்கு ஆளாகினர்.
திமிங்கல சுறாக்களை வணிகமயமாக்குவது தடைசெய்யப்பட்டுள்ளதால், கண்காட்சியில் திமிங்கல சுறாக்களை காட்சிப்படுத்துவது சரியல்ல என Xiaomeisha Ocean World தெரிவித்துள்ளது.
சுறா இனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இயந்திரத்தைப் பயன்படுத்தியதாக அது கூறியது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg