Latest Sports News Online

சிங்கப்பூரில் தம்முடன் வசித்த நபரைக் கொன்றவருக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு!

சிங்கப்பூரில் தம்முடன் வசித்த 61 வயதுடையவரைக் கொலை செய்த குற்றச்சாட்டிற்காக 59 வயதுடைய Ng Boon Hong என்பவருக்கு தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தடுப்புக்காவல் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மனநலப் பரிசோதனைக்காக அவர் தடுப்பு காவலில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இச்சம்பவம் மார்ச் 15-ஆம் தேதி இரவு 11 மணிக்கும்,மார்ச்-16 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடந்துள்ளது என்று நம்பப்படுகிறது.

இந்த சம்பவம் ரெட்ஹில் குளோஸ் பிளாக் 90- இல் நிகழ்ந்தது.

மீண்டும் இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி வரும்.